உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கேப்பாப்பிலவில் 6.05 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

89 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை மீண்டும் உரியவர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 6.05 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி விடுவிப்பு நடவடிக்கை இன்றையதினம் (21.10.2026) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் முன்னிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சுஜிபா சிவதாஸ் அவர்களிடம், முல்லைகேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு! மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கை முன்னெடுப்புத்தீவு இராணுவப் பொறுப்பதிகாரி பிரிகேடியர் அவர்களால் காணி விடுவிப்பு ஆவணம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை மீண்டும் உரிய உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கேப்பாபிலவு காணி விடுவிப்பு நடவடிக்கை அப்பகுதி மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நீண்டகாலமாகத் தமது பூர்வீகக் காணிகளை மீளப்பெறுவதற்காகக் காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், விடுவிக்கப்பட்ட காணிகள் உரிய மக்களிடம் முழுமையாகக் கையளிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் 4 ஆவது அறிக்கை பச்சைப் பொய்! : கோடீஸ்வரன் எம்.பி. குற்றச்சாட்டு

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நான்காவது அறிக்கையில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள்…

92 0 0
இலங்கை செய்திகள்

பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி! : கஜேந்திரகுமார் எம்.பி. சாடல்

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத் தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்தபோது, அந்தக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் ராஜ் சோமதேவா செயற்பட்டார். ராஜ் சோமதேவா ஒரு…

82 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயல் நிவாரண நிதிக்கு என்ன நடந்தது? : சஜித் கேள்வி

டித்வா அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் மக்களைச் சென்றடையவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை…

81 0 0
இலங்கை செய்திகள்

அநுர தலைமையிலான அரசுக்கு ஆதரவாக குருநாகலிலும் மாபெரும் அமைதிப் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் குருநாகலில்…

71 0 0