உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசின் தோல்வியால் நாடு கடும் நெருக்கடியில்; மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
109 பார்வைகள்

மின்வெட்டு எப்போது நிறுத்தப்படும் என்று எவருக்கும் தெரியாத ஒரு நிச்சயமற்ற நிலை நாட்டில் நிலவுகின்றது என்றும், அரசின் முறையற்ற நிர்வாகத்தினால் நாடு கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எரிபொருள் விநியோகத்துக்காக கியூ.ஆர். குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், எரிபொருள் அற்ற நிரப்பு நிலையங்களையும் நீண்ட வரிசைகளையும் இன்றும் பரவலாகக் காண முடிகின்றது.

மேலும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதால், தோட்டப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் மாவு சார்ந்த உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆற்றல் நெருக்கடிக்கும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கத் தவறிய அரசு, மக்களின் பட்டினியை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்படுகின்றது.” – என்றார்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து மேலும் சுட்டிக்காட்டிய அவர்,

“நேரடியாக அந்நிய முதலீடுகள் நாட்டுக்கு வருவதாக அரசு கூறினாலும், கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்திருந்த சீன முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைக் கைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு டொலர்களில் நஷ்டஈடு செலுத்த வேண்டிய அவலநிலையும் உருவாகியுள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்ச சூழல் காரணமாக, மீண்டும் 2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு மக்கள் போராட்டம் (அரகலய) வெடிப்பதற்கான அபாயம் காணப்படுகின்றது.” – என்றார்.

சமூக மற்றும் கலாச்சார விடயங்கள் குறித்து அவர் பேசுகையில்,
“பௌத்த துறவிகளின் விவகாரங்களில் தீர்மானம் எடுக்கும் உரிமை மனிதர்களுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ கிடையாது. அது சாசன சம்பிரதாயங்கள் மற்றும் சங்க சபைகளினால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதேபோல், ‘பச்சைக்குத்தல்’ போன்ற விடயங்களைப் பழைய இடதுசாரி சிந்தனைச் சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்த முயல்வது அடிப்படை உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்துக்கு எதிரானது. அடிப்படை உரிமைகளை மதிக்காத எந்தவொரு அரசியல் இயக்கமும் நிலைத்து நிற்க முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

148 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

137 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

130 0 0