நுவரெலியாவில் கனமழை; மக்கள் அசௌகரியம்.!
நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, கொத்மலை நீர்த்தேக்கத்தை சென்றடையும் ஆக்ராஓயா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கினால், லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரயா மற்றும் தங்கக்கலை தோட்டப் பகுதிகளில் ஆக்ராஓயா ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள பல வீடுகள், விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக லிந்துல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதிய வேளையில் திடீரென வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தமையினால், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதேவேளை, பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அம்பேவெல தொடருந்து நிலையமும் நுவரெலியா – அம்பேவெல – பட்டிப்பொல பிரதான வீதியும் வெள்ள நீரில் மூழ்கின.
இதனால், குறித்த பிரதான வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தடைப்பட்டிருந்ததாக அம்பேவெல தொடருந்து நிலைய பொறுப்பதிகாரி அசேந்திர திசநாயக்க தெரிவித்துள்ளார்.




