உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவிற்கு திறந்த பிடியாணை.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
112 பார்வைகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் இன்று (21) திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜரான ஏனைய இரண்டு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாகக் குறித்த பிடியாணைப் பிறப்பிக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அதனை விரைவாகச் செயற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கும் உத்தரவிட்டது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கஹவத்தை பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

அந்தத் தீர்ப்பிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பின்னர் அவர்கள் மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பிற்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் விசாரணை கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி நிறைவடைந்ததுடன், பிரதிவாதிகள் மூவரையும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து உயர்நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பிறந்திருந்தது.

எனினும், வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது பிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அவர் வெளிநாடு சென்றுள்ளதாகச் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தப் பிடியாணையை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

148 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

137 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

130 0 0