உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனையில் “சமைக்கலாம் வாங்க” இலவச சமையற்கலை பயிற்சிப் பட்டறை.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
91 பார்வைகள்

எடின்பெரோ நிறுவனம், ஊவா எப்.எம். (Uva FM) வானொலி மற்றும் கல்முனை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபை ஆகியன இணைந்து நடத்திய “சமைக்கலாம் வாங்க” எனும் தொனிப்பொருளிலான விசேட இலவச சமையற்கலைப் பயிற்சி நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை(20) கல்முனையில் நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச கலாச்சார அதிகார சபையின் செயலாளர் அஸ்ஹர் ஆதமின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை ஊவா வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.எம். றமீஸ் மிகச் சிறப்பாக ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஸான், பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் தலைவி கலாபூஷணம் மஷூரா சுஹுர்தீன், கலாச்சார அதிகார சபையின் பொருளாளர் சம்சுதீன் தஸ்தகீர், கலாச்சார உத்தியோகத்தர் எஸ். ரஜாயா உட்பட கலாச்சார அதிகார சபையின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிரபல சமையற்கலை நிபுணர் எம்.எம். றிபாஸ் இந்நிகழ்வில் முதன்மை வளவாளராகக் கலந்து கொண்டு, பங்கேற்றவர்களுக்குச் செய்முறைப் பயிற்சிகளுடன் பல்வேறு பயனுள்ள சமையற்கலை நுட்பங்களையும் நவீன அணுகுமுறைகளையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

அத்துடன், பயிற்சியின் போது கலந்து கொண்டு தமது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்திய பங்கேற்பாளர்களுக்கு விசேட பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

148 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

137 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

130 0 0