உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட தபால் ஊழியர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
110 பார்வைகள்

பண்டாரவளை பிராந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்துமுல்ல, சொரகுண பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுமக்களுக்கான தபால் கடிதங்களை விநியோகிக்காமல் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த தபால் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, பிரதேச மக்களுக்கு விநியோகிக்கப்படாமல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தபால் கடிதங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து, சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் தபால் கடிதங்களை உரியவர்களிடம் விநியோகிக்காமல் வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று புதன்கிழமை (21) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

148 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

137 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

130 0 0