உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோதமாக கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தொகுதி சுருக்கு வலைகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
119 பார்வைகள்

வாழைச்சேனை மட்டக்களப்பு எல்லை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடல் நீரினுள் அமிழ்த்தி மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தொகுதி சுருக்கு வலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை (20) குறித்த கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இவ்வலைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வலைகள் நேற்று மாலை கடற்றொழில் பரிசோதகர் கி. ஜெகதர்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நாளை வியாழக்கிழமை (22) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் பரிசோதகர் தெரிவித்தார்.

வாகரை, வாழைச்சேனை, களுவன்கேணி உள்ளிட்ட கடற்பரப்புகளில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடி நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் பணிகளில் ஈடுபடும் கடற்றொழில் உத்தியோகத்தர்கள் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாகச் சிலருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

148 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

138 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

130 0 0