உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெரும்பான்மையினரை ஏறி மிதித்துக் கொண்டு இனவாதமற்றவர்கள் எனக் காட்ட அரசு முயற்சி.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
113 பார்வைகள்

நாட்டின் பெரும்பான்மையினமான பௌத்தர்களை ஏறி மிதித்துக்கொண்டு, நாங்கள் இனவாதிகள் அல்லர் என்பதை ஏனைய இனத்தவர்களுக்குக் காண்பிக்க அரசு முயற்சிப்பது முற்றிலும் தவறான செயலாகும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தவறுகளைத் திருத்திக்கொண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், பௌத்த பிக்குகளை அவமதிப்பதை அரசு உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“எக்னெலிகொட வழக்கு விவகாரம் தொடர்பில் குறிப்பிட்ட கருத்துக்காகவே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அந்தப் பொதுமன்னிப்பு தற்போது இரத்துச் செய்யப்பட்டு அவர் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து அரசு பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் தவறு காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறாயின், அந்தத் தவறைத் திருத்திக்கொண்டு ஞானசார தேரருக்குத் தற்போதைய ஜனாதிபதியால் ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது?” – என்று கேள்வி எழுப்பினார்.

அரசின் செயற்பாடுகள் குறித்து மேலும் சாடிய அவர்,
“நாட்டின் பெரும்பான்மையினமான பௌத்தர்களை ஏறி மிதித்துக்கொண்டு, நாங்கள் இனவாதிகள் அல்லர் என்ற நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்திக்கொண்டு அரசுதான் இனவாதத்தைத் தூண்டிவிடுகின்றது. மகா சங்கத்தினருக்கும், பௌத்த பிக்குகளுக்கும் எதிராகத் திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசு அவர்களை அவமதித்து வருகின்றது. அத்துடன் மகா சங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு முரணாகவே அரசு தொடர்ந்து செயற்பட்டும் வருகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

148 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

138 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

130 0 0