உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
21 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈ.பி.டி.பி. மீதான நடவடிக்கைகள் வரவேற்க வேண்டியவை – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
82 பார்வைகள்

ஈ.பி.டி.பி. க்கு எதிராக காலத்துக்கு காலம் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.

இதற்கு அண்மைய உதாரணமாக செம்மணி எலும்புக் கூடுகள் தொடர்பாக, பேராசிரியர் ராஜ்சோமதேவ வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையும் அமைந்திருக்கின்றது என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,

தற்போது ஈ.பி.டி.பி. அலுவலகங்கள் மீது முன்னெடுக்கின்ற சோதனைகளும் எம்மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து எம்மை விடுவிக்கும் நகர்வுகளாகவே இருக்கும்.

அந்தவகையில் இவ்வாறான நடவடிக்கைகள் வரவேற்கப்படவேண்டியவை என்றும் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வேலணை பிரதேசத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட செயலாளர் நாயகம் –

குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் எமது இரண்டு அலுவலகங்கள் குறிப்பாக முதலில் யாழ் அலுவலகமும், அதன் பின்னர் ஊர்காவற்றுறை அலுவலகமும் சோதனையிடப்பட்டுள்ளன. இவற்றை நாம் வரவேற்கின்றோம்.

இதேநேரம் இவ்வாறான விடயங்கள் எதிர்பார்க்கப்பட வேண்டியவைதான்.

மறுபுறம், எம்மீது பலவகையான குற்றச்சாட்டுக்கள் பலதரப்பினரால் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இவற்றை விசாரிக்குமாறு இன்றைய ஜனாதிபதிக்கு நாம் எழுத்து மூலம் கோரிக்கையும் விடுத்திருக்கின்றோம்.

செம்மணியில் தோண்டப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

தற்போது, அவற்றை ஆய்வு செய்து வருகின்ற பேராசிரியரின் இடைக்கால அறிக்கையில், தொற்றுநோய் பரவல் அல்லது இயற்கை பேரிடர் காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புக்களாக இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே, செம்மணிப் பகுதியில் இளைஞர் யுவதிகள் காணாமல் போவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக வெளிவந்த நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களே எம்மால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எமது முயற்சியினாலேயே, அக்கால கட்டத்தில் காணாமல் போதல் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

மறுபுறம் மட்டக்களப்பு குருக்கள் மடம் புதைகுழியின் உண்மைகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றது.

இந்த உண்மையை மறைத்து எமக்கு எதிரான விர்சனங்களை முன்வைத்தவர்களுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே பேராசிராசியரின் இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது.

இதேபோன்று பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும்.

ஆகவே, எமக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பாக பதற்றம் அடையாமல், எமது அரசியல் வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.

எங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பவற்றை முடிந்தளவு நிறைவேற்றுவதற்கு உழைக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயி@ரிழப்பு : மேலும் ஒருவர் காயம்

அனுராதபுரம் – நம்படகஸ்வேவ பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக, வயல் பகுதியில்…

73 0 0
இலங்கை செய்திகள்

தராதரம், பதவி அல்லது அதிகாரம் போன்றவற்றிற்காக சட்டத்தை வளைக்காமல் அனைவருக்கும் சமமான நீதி வழங்கப்பட வேண்டும்!

உயர் நீதிமன்றத்தினால் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை…

87 0 0
இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா

இலங்கைப் பாராளுமன்றத்தில் 2026ம் ஆண்டுக்கான நவராத்திரி விழா சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்ற உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில்இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மத…

78 0 0
இலங்கை செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் உயி@ரிழந்த 15 வயது மாணவி!

இன்றையதினம் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவமானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது திருகோணமலை – தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த நபீர் பாத்திமா…

135 0 0