உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் விசேட சோதனை; பெருந்தொகை போ*தைப்பொருள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
122 பார்வைகள்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையொன்றின் போது, 67.53 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையினை இலங்கைச் சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வெளிநாடுகள் பலவற்றில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 11 வெளிநாட்டுத் தபால் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் தபால் பொருட்களைப் பரிசோதித்தபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் இந்தச் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

பின்னர் உரிய முகவரிகளின் உரிமையாளர்கள் வந்து அதைப் பெற்றுக்கொள்ளும் வரை அவற்றைத் தடுத்து வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன், வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு யாரும் வராத காரணத்தினால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் முன்னிலையில் அவற்றைத் திறந்து பரிசோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதற்கமைய, இன்று (19) சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மத்திய தபால் பரிமாற்றகத்தில் இந்த 11 பொதிகளையும் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்தே இந்தப் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பெல்ஜியம், பிரான்ஸ், கனடா மற்றும் ஜேர்மனியிலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் இருந்து 2,395 கிராம் MDMA மாத்திரைகளும், நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதியொன்றில் இருந்து மெண்டி (Mandy) போதைப்பொருள் 33 கிராம்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதிகளுக்குள் இருந்து 30.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்பிடப்பட்ட சந்தைப் பெறுமதியைக் கொண்ட 3 கிலோ கிராம்களுக்கும் அதிகமான குஷ் தொகையினை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இங்கு பிடிபட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாக பெல்ஜியத்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சுமார் 33.03 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2,200 கிராம் MDMA மாத்திரைத்தொகை காணப்படுகின்றது.

மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஆரம்ப கட்டப் பரிசோதனைகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்கும் நீதிமன்ற ஊடாகச் சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் பொறுப்பில் எடுக்கப்பட்ட போதைப்பொருட்களை இலங்கைச் சுங்க அதிகாரிகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0