உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்களைத் தொடர்ந்து ஏமாற்றும் என்.பி.பி. அரசு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
112 பார்வைகள்

அரசு தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வருகின்றது என்றும், ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் முன்னணியின் தலைவி குமாரி பத்திரகே குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசு தாம் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பாக உரிய ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையான தகவல்களையே மக்களுக்குக் கூற வேண்டும். ஆனால், கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொய்களை மட்டுமே இந்த அரசு கூறி வருகின்றது. இத்தகைய பொய்களை சர்வதேச நாடுகள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

நாட்டின் அடுத்த தலைமுறையினரைத் தனது அரசியல் நோக்கங்களுக்காகப் பகடைக்காய்களாக அரசு பயன்படுத்தி வருகின்றது. மின்சாரத் தடையால் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினைகளை மறக்கடிக்கவே, ராஜபக்ஷ குடும்பத்தினரைக் குற்றவாளிகளாகக் காண்பித்து அரசு தப்பித்துக் கொள்ளவும், மக்களைத் திசைதிருப்பவும் முயற்சிக்கின்றது.” – என்றார்.

வரவு – செலவுத் திட்டத்தில் வரிச் சலுகைகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களுக்குக் கூட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர்,

“அரசியல்வாதிகள் அரச வாகனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பயணங்கள் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு வழியமைக்கக் கூடாது. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இலங்கை, தற்போது சர்வதேசத்தின் விருப்பத்துக்கு ஏற்ப செயற்பட்டு வருவது கவலையளிக்கின்றது.

அத்துடன், புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் திருத்தங்கள் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நாட்டில் காவி உடை அணிந்த பௌத்த மதத் தலைவர்களுக்கு எதிராக அரசு செயற்படுவது மிகவும் ஆபத்தானது.” – என்று எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0