உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மஹிந்த பொருளாதாரப் படுகொ**லையாளி; மைத்திரி அரசியலமைப்பு மீறலாளி.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
111 பார்வைகள்

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி நீதித்துறையை ஆக்கிரமிப்பதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சியினர், தற்போது நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அழுத்தம் பிரயோகிக்கின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவை சுயாதீனமாகவும் முறையாகவும் விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

விசாரணைத் தரப்பினர் விசாரணைகளைத் துரிதப்படுத்தி நீதிமன்றத்தில் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றனர். நீதிமன்றமே கைதுகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றது. அவ்வாறிருக்கையில், இது எவ்வாறு அரசியல் பழிவாங்கலாகும்?

கடந்த கால அரசுகள் சர்ச்சைக்குரிய வழக்குகள் சிலவற்றைத் தாக்கல் செய்தபோதிலும், அவற்றுக்கான விசாரணைகளைச் சரியாக முன்னெடுக்கவில்லை. அரசியல் தலையீடுகள் காரணமாகப் பல வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் மீளப்பெறப்பட்டன.

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நீதித்துறை இல்லாதொழியும் என்றும், ஜனாதிபதி நீதித்துறையை ஆக்கிரமிப்பார் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். ஆனால், அவர்களே இன்று நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். எதிர்க்கட்சியினரைப் போல் எம்மால் நீதித்துறையைத் எமது தேவைக்கேற்ப பயன்படுத்த முடியாது.” – என்றார்.

நீதித்துறைக்கு அப்பாற்பட்டுத் தாம் செயற்பட முடியாது என ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளமையை அனைவரும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த பிரதி அமைச்சர் சுனில் வட்டகல,

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொருளாதாரப் படுகொலையாளியாகவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பை மீறிய குற்றவாளியாகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறிய குற்றவாளியாகவும் உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலைக்குத் தற்போதைய ஜனாதிபதி ஒருபோதும் செல்லமாட்டார் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று அவர் மேலும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0