உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பின்னடைவு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
124 பார்வைகள்

கொழும்புத் துறைமுகத்தின் தளவாட மையத் திட்டத்திலிருந்து சீன நிறுவனம் வெளியேறுவது மற்றும் முன்னணி சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் திரும்பப் பெறப்படுவது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கவலை வெளியிட்டுள்ளார்.

தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவிலேயே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“அதிகளவிலான நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பதிலாக, பெருமளவிலான அந்நிய முதலீடுகள் நாட்டிலிருந்து வெளியேறுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றோமா? கொழும்புத் துறைமுகத்தில் 392 மில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்படவிருந்த தளவாட மையத் திட்டத்திலிருந்து சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் விலகியுள்ளது. அத்துடன் இந்தத் திட்டத்தை இரத்துச் செய்ததற்காக இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு 21.9 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க உடன்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, எச்.எஸ்.பி.சி. குளோபல் சர்வீஸ் சென்டர் தனது சேவைகளைப் பிலிப்பைன்ஸுக்கு மாற்றக்கூடும் என்றும், இதன் காரணமாக 3 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகளும் 500 மறைமுக வேலைவாய்ப்புகளும் இழக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகின்றன.

இந்த வெளியேற்றம் 2027 டிசம்பருக்குள் நிறைவடையும் எனத் தெரிகின்றது. இந்தத் தகவல் உண்மையல்ல என்று நான் நம்புகின்றேன்.

ஏனெனில், இது உண்மையாகும் பட்சத்தில், அது நமது தாய்நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்கு ஈர்ப்பதற்கும், முதலீடுகள் வெளியேறுவதைத் தடுப்பதற்கும் அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0