உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு: மேலும் ஐவர் கைது!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
114 பார்வைகள்

காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், பாணந்துறை – வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் காவல்துறையினர் இணைந்து குறித்த பகுதியில் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும் அந்த பகுதியில் இடம்பெறும் ஏனைய சட்டவிரோதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கல்கமுவ காவல்துறையினரால் இணைந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எங்கிருந்து பெறப்பட்டன, வனவிலங்குகளைக் குறிவைத்து ஒழுங்கமைக்கப்பட்ட சட்டவிரோதக் குழுவொன்று செயற்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0