அக்குரணையை உலுக்கிய கோர விபத்து; உ**யிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!
கண்டி – மாத்தளை பிரதான வீதியின் அக்குரணை 7ஆம் கட்டைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (19) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து காரணமாக படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த மற்றைய நபர்கள் அக்குரணை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, நான்கு முச்சக்கரவண்டிகள், இரண்டு லொறிகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


