நாடளாவிய ரீதியில் இன்று முதல் மின்வெட்டு.!
நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் எரிசக்தி அமைச்சிடம் தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் விடுத்த கோரிக்கைக்கு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி வலுசக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை உறுதிப்படுத்தினார்.
அதற்கமைய மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையான காலப்பகுதியில், நான்கு வலயங்களாக ஒரு மணி நேரத்திற்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மின்வெட்டினால் பாதிக்கப்படும் வலயங்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


