உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதிகள் சீரமைக்கப்படுவதில்லை; பொதுமக்கள் அவதி.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
120 பார்வைகள்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகள் மற்றும் உட்புற வீதிகளில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காகத் தோண்டப்படும் குழிகள் முறையாக மூடிச் சீரமைக்கப்படாமல் விடப்படுவதனால், வீதிகள் முழுமையாக நாசமடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குடிநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் அல்லது தனியார் தேவைப்பாடுகளுக்காக வீதிகளை வெட்டி நீர் இணைப்புகள் பெறப்பட்ட பின்னர், தோண்டப்பட்ட இடங்கள் முறையாகக் காப்பரண் செய்யப்பட்டுத் தார் அல்லது கொங்கிறீட் இடப்பட்டுச் சீரமைக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறிப்பாக கல்முனை மாநகரப் பகுதியில் தோண்டப்பட்ட சிறிய குழிகள், மழைநீர் தேங்குவதனாலும் வாகனப் போக்குவரத்தினாலும் நாளடைவில் பெரிதாகி முழு வீதியையும் சீரழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்றே பல முக்கிய வீதிகள் நீர் இணைப்புகளுக்காக தோண்டப்பட்டுப் பின்னர் சீரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் உடைந்து காணப்படுகின்றன. இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், இரவு வேளைகளில் பாரிய விபத்துக்கள் சம்பவிக்கும் அபாயமும் நிலவுகிறது.

மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படும் பொது வீதிகள் இவ்வாறான அலட்சியப் போக்கினால் பாழடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர். நீர் இணைப்புகளை வழங்க அனுமதி அளிக்கும் உள்ளூராட்சி மன்றங்களும் (மாநகர சபை/பிரதேச சபைகள்) மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் உடனடியாகத் தலையிட்டு, தோண்டப்படும் வீதிகளை ஒப்பந்தக்காரர்கள் அல்லது உரிய தரப்பினர் உடனடியாகப் பழைய நிலைக்குச் சீரமைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0