உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நான்காவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
124 பார்வைகள்

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 19ஆம் திகதி நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

இதேவேளை இப்போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் முகமாக நேற்று இரவு முதல் இரவு வேலைகளில் தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அங்கு கூடியிருந்த பிக்குகள் தெரிவித்ததோடு, பிக்குமார்கள் மற்றும் அங்கு சமூகம் தந்திருந்த பொதுமக்களும் சேர்ந்து “தீப் பந்தங்களை” கைகளில் ஏந்தியவாறு அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர்.

இந்தப் போராட்டம் ஒக்டோபர் 16ஆம் திகதி மதியம் பிக்குகள் விகாரமகாதேவி பூங்காவிற்கு வந்தடைந்தபோது ஆரம்பிக்கப்பட்டது.

அதே நாள், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தில் கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, பிக்குகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.

கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை தாம் பூங்காவை விட்டுச் செல்லப் போவதில்லை என சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

ஒக்டோபர் 16 ஆம் திகதி, குறித்த குழுவினர் முதலில் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஒன்றுகூடியதுடன், அதனைத் தொடர்ந்து புத்தசாசன அமைச்சுக்குச் சென்று அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

எனினும், அந்தக் கலந்துரையாடல்கள் வெற்றியளிக்கவில்லை எனக் குறிப்பிட்ட பிக்குகள், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விகாரமகாதேவி பூங்காவில் தமது போராட்டத்தைத் தொடரப் போவதாக பின்னர் அறிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0