உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அடுத்த வருடம் முதல் 2, 6ஆம் தரங்களுக்கு புதிய பாடத்திட்டங்கள்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
105 பார்வைகள்

நவீன உலகுக்குப் பொருத்தமான வகையில் கல்வி முறைமை மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது என்றும், அதன் கட்டமாக 2027ஆம் ஆண்டு முதல் 2, 6 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பதுளை நகரில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நவீன உலகுக்குப் பொருத்தமான வகையில் நாட்டின் கல்விக் கொள்கை கட்டாயம் மறுசீரமைக்கப்பட வேண்டும். முதலாம் வகுப்புக்குப் புதிய பாடத்திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்குப் புதிய பாடத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

அனைத்துப் பிள்ளைகளினதும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசால் புதிய கல்வி முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. வெறுமனே பரீட்சைகளுக்கு மட்டும் முகங்கொடுக்கும் மாணவர்களுக்குப் பதிலாக, எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய தலைமுறையை உருவாக்குவதே எமது முதன்மை எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.

கல்வித் துறையிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவது குறித்துத் தொடர்ந்து விளக்கிய பிரதமர்,
“17 ஆயிரம் பேரை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழக அமைப்புக்கு 2 ஆயிரம் விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு, தற்போது அப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் ஆண்டின் பெப்ரவரி மாதமளவில் முழுமையான கல்வி முறைமைக்கு புதிதாகச் சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0