உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிக்குகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்க பௌத்தர்களே ஓரணியில் திரளுங்கள்! : முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அறைகூவல்!!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
97 பார்வைகள்

பௌத்த மக்கள் அரசியல், குலம் மற்றும் சமூக ரீதியில் பிளவுபட்டு நிற்காமல், தமது அடையாளம், மரபுரிமைகள் மற்றும் பிக்குகளுக்கான உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒன்றுபட வேண்டும் என்று நாரஹேன்பிட்ட அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தவறிழைப்பவர்கள் சட்டத்தின் முன் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அத்தகைய தண்டனையை எதிர்கொள்ளும் அளவுக்கு ஞானசார தேரர் தவறிழைக்கவில்லை என நான் நம்புகின்றேன்.

ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுவதற்கு முன்னர் மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அவர்களின் வழிகாட்டலின்படி செயற்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினை உருவெடுத்திருக்காது.

துறவற ஆடை அகற்றப்பட்ட சம்பவத்தை உண்மையான பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த விவகாரத்தில் இடம்பெற்ற தவறை ஜனாதிபதி சீர்செய்தால் பௌத்த மக்கள் மத்தியில் அவருக்குரிய நன்மதிப்பு அதிகரிக்கும்.

பௌத்த மக்கள் மத்தியில் நிலவும் பிளவுகளே அழிவுக்கான ஆரம்பமாக அமையும். ஆட்சியைப் பிடிப்பதற்கோ அல்லது கவிழ்ப்பதற்கோ அல்லாமல், பௌத்த சாசனத்தின் முக்கியத்துவத்தையும் மரபுரிமைகளையும் பாதுகாக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

153 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

145 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

135 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

134 0 0