உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வடக்குக், கிழக்கில் தொடர் போராட்டம்!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
93 பார்வைகள்

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், அரசின் அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசைப் பாதுகாப்பதாகக் கூறப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தாலும் உள்நாட்டுத் தரப்புகளாலும் நிராகரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி, அவற்றுக்கு உரிய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதும் கூட்டணியின் முதன்மைக் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமை, யாழ்ப்பாணத்தில் திலீபனின் சிலை தொடர்பான விவகாரம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழிகள் போன்ற பிரச்சினைகள் மூலம் தமிழ் மக்களின் உண்மையான கோரிக்கைகள் திசைதிருப்பப்படுகின்றன. வடக்கு, கிழக்கில் தொடரும் நில அபகரிப்புகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்குச் சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

தற்போதைய அரசின் கடந்த கால ஆட்சியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

இதனைக் கண்டித்து சாவகச்சேரியில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணப் பகுதிகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் தொடர்ச்சியான கண்டனப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.” – என்றார்.
………………………….

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

153 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

145 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

135 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

134 0 0