உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாடளாவிய சுற்றிவளைப்பு : ஒரே நாளில் 434 பேர் கைது!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
121 பார்வைகள்

பொலிஸாரால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின்போது நாடு முழுவதும் தீவிர தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், பெருமளவிலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது 26 ஆயிரத்து 523 நபர்கள் பொலிஸாரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சந்தேகத்தின் பேரில் 434 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையுடன், பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய மேலும் 13 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 348 பிடியாணைகளில், 253 பிடியாணை உத்தரவுகளுக்கு அமைய தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மதுபோதையில் மற்றும் மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதிகளில் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாகப் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 4 ஆயிரத்து 443 பேருக்கு எதிராக வழக்குப் பதிவுகள் மற்றும் அபராத நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ளன.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் பாவனையைத் தடுக்கவும், வீதி விபத்துகளைக் குறைத்து வீதிப் பாதுகாப்பை பலப்படுத்தவும் இத்தகைய நாடு தழுவிய சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

153 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

145 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

135 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

134 0 0