உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழ் ஈழப்போர் வரலாற்றில் முதல் பெண் போராளி மாலதியின் 39ஆவது நினைவு நாள் மன்னாரில் அனுஸ்ரிப்பு

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
105 பார்வைகள்

ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது பெண் போராளியும், இந்திய இராணுவத்திற்கு (IPKF) எதிரான மோதலில் கோப்பாயில் வீரமரணமடைந்த இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் (சகாயசீலி பேதுருப்பிள்ளை) 39 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, அவரது சொந்த மண்ணான மன்னார் ஆட்காட்டிவெளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (10)மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு மன்னாரில் பிறந்த மாலதி வடக்கு கிழக்கு பகுதிகளில் இலங்கை இராணுவத்தாலும் இந்திய இராணுவத்தாலும் தமிழ் பெண்கள் படும் அவலத்தையும் அவர்கள் எதிர்கொண்ட துயரத்தையும் எண்ணி ஆயுதம் ஏந்தினார்.

தனது 20 வது வயதில் 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக நடைபெற்ற சண்டையில் நேருக்கு நேர் மோதி வீரச்சாவடைந்தார்.

.தமிழ் ஈழப்போர் வரலாற்றில் வீரசாவடைந்த முதல் பெண்ணாக மாலதி நினைவு கூறப்படுகிறார்.

அவரின் உயிர் தியாகத்தையும் துணிச்சலையும் கௌரவப் படுத்தும் முகமாக அவளின் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் மதிப்பளித்து மாலதியின் பெயரில் படையணிகளும் உருவாக்கப்பட்டது.

பெண்களாலும் ஈழ விடியலுக்காக போராட முடியும் என்பதை நிரூபித்து உயிர் திறந்த மாலதியின் நினைவு பலராலும் மறுக்கப்பட்டாலும் வருடா வருடம் ஆட்காட்டிவெளி பகுதியில் அவளின் நினைவாகஅவரின் குடும்பத்தினரால் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபட்டு இடம்பெற்று வருகின்றது.

குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வில்பொது சுடர்ஏற்றலுடன் மாலதியின் பெற்றோர், உறவினர்கள் இணைந்து மாலதியின்திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

153 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

145 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

135 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

134 0 0