உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநுரவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கள்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
90 பார்வைகள்

“நீறுபூத்த நெருப்பாக எப்போதும் இருக்கும் இனவாதத்தைத் தூண்டிவிடுவதில், “அரசுக்கு ஆதரவாக” எழுதுகின்றோம் என நினைத்து, தமிழ் மொழியில் பொதுவெளியில் எழுதும் “எழுத்தாளர்கள்”, பேசும் “பேச்சாளர்கள்”, அதை அப்படியே கொண்டு செல்லும் யூ-டியூப் ஊடகர்கள், இன்று நாட்டிலே கொஞ்சம் வித்தியாசமாக ஆட்சி செய்ய முயலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை அவஸ்தைக்கு உள்ளாக்குகின்றார்கள். இவர்கள் பொறுப்பற்றத்தனமாகப் பொதுவெளியில் வந்து போடும் கோஷம், “ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்” (ஏ.ஐ.) மூலம் உடனடியாகச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, சிங்களப் பொதுவெளிகளில் உலாவிடப்படுகின்றன. அவை “சிங்கள – பௌத்த மத அரசியல்” மீண்டும் தலைதூக்கக் காரணங்களாக அமைகின்றன. ஆகவே, “அந்தாளை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கப்பா!” என எதிர்க்கட்சியில் இருந்தே நான் சொல்கின்றேன்.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இப்போது யாரும், குற்றம் புரிந்த ஞானசாரரைச் சிறையில் போட்டது தவறு எனச் சொல்லவில்லை. அவரது சீருடைதான் பிரச்சினை. அதை ஜனாதிபதி அநுர தீர்க்கட்டும். இப்போது, ஜனாதிபதி உடனடியாக ஞானசாரரின் சீருடை தொடர்பில் பௌத்த தலைமைகளைக் கண்டு பேசி, இரண்டு வாரங்களில் தீர்வு தருவதாக உறுதி அளித்துள்ளார். இது அவர் மீதான பௌத்த மதத் தலைமைகளின் அழுத்தம். அதற்கு அவர் பதில் கூறியுள்ளார்.

நீறுபூத்த நெருப்பாக இருக்கும் “இனவாதம்” முழுமையாக மாறக் காலம் எடுக்கும். அதைத் தற்காலிகமாகத் தரைக்கு அடியில் போட்டது “அரகலய” என்ற கிளர்ச்சியாகும். இது தொடர்பில், சமூக ஊடகங்களில் கூவித் திரியும், தமிழ் பேசும் “எழுத்தாளர்களுக்கும்”, “பேச்சாளர்களுக்கும்” கூறுகின்றேன், பௌத்த மதத் தேரர்கள் தொடர்பில், ஜனாதிபதி அநுரவுக்கு உதவி செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால், மீண்டும் மத அரசியல் தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்றால், தயவுசெய்து அமைதியாக இருங்கள். நீங்கள் பொதுவெளியில் வந்து போடும் “அரோகரா” அல்லது “சபாஷ்” அல்லது “ஜயமேவா” கோஷங்கள் எல்லாம், ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மூலம் உடன் இன்ஸ்டன்ட்டாகச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, சிங்களப் பொதுவெளிகளில் உலாவிடப்பட்டு, “சிங்கள – பௌத்த மத அரசியல்” மீண்டும் தலைதூக்கக் காரணங்களாக அமைகின்றன.

ஆகவே, தமிழ் பேசும் மக்கள், இது பற்றி அதிகம் பேசாமல், “அதே மாதிரி நமது பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுங்கள் ஜனாதிபதி அவர்களே!”, என கோரிக்கை விடுத்துவிட்டு அமைதியாக இருக்க வேண்டும். அதாவது, ஜனாதிபதியை நிம்மதியாக ஆட்சி செய்ய விட வேண்டும் என எதிர்க்கட்சியில் இருந்து நானே சொல்கின்றேன்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

153 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

145 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

135 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

134 0 0