உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கறுப்பு ஜூலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
116 பார்வைகள்

1983 ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின்போதே அவர் இந்தப் பிரேரணையைச் சமர்ப்பித்தார்.

தனிநபர் பிரேரணையை முன்வைத்து அவர் உரையாற்றுகையில்,
“1983 கறுப்பு ஜூலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள், இன மோதல்கள் என்பன நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, சமூகக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் மீது மிக மோசமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சம்பவங்கள் இடம்பெற்று 40 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டும், சொத்துக்கள் அழிக்கப்பட்டும் உள்ள நிலையில், இந்த வன்முறைகளை வழிநடத்தியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அத்துடன், பரந்துபட்ட சுயாதீன விசாரணை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இன மோதல்களும் வன்முறைகளும் இனி இப்பூமியில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதும், நாட்டின் சகல இனக்குழுமங்களுக்குமிடையே நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியதும் இன்றியமையாதது என்பதால், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

157 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

146 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

136 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

135 0 0