உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிக்குகளுக்கு காட்டிய அக்கறையை தமிழ், முஸ்லிம்களுக்கும் காட்டுங்கள்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
128 பார்வைகள்

சிறையில் உள்ள பௌத்த பிக்குகளின் காவி உடை அகற்றும் விவகாரத்தைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க காலம் குறிப்பிட்டு நடவடிக்கை எடுத்தது போன்று, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கும் குழு அமைத்துத் தீர்வு காண வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற, 1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கக் கோரும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கறுப்பு ஜூலை கலவரத்தின் போது வடக்கு, கிழக்கை விடத் தென்னிலங்கைத் தமிழ் மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். கொழும்பில் என் வீடும் எரிக்கப்பட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில், தற்போதைய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் தந்தை தனது குடும்பத்தினரைத் தனது வாகனத்தில் அழைத்துச் சென்று பாதுகாத்தார்.

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி, இரண்டு வாரங்களுக்குள் சட்டத் திருத்தங்கள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டமையை வரவேற்கின்றேன்.

பிக்குகள் விவகாரத்தில் காட்டிய அக்கறையைப் போல், தமிழ், முஸ்லிம்களின் நீண்டகாலக் காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி குழுக்களை அமைத்துக் காலம் குறிப்பிட்டுத் தீர்வுகளை வழங்க வேண்டும்.

இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் மூலமே எதிர்காலத்தில் கறுப்பு ஜூலை போன்ற கலவரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

157 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

146 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

136 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

135 0 0