கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ மீண்டும் சிறைக்கு.!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, கண் பரிசோதனைக்காக இன்று (09) காலை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை முடிவடைந்ததும் மீண்டும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கண்ணில் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக நேற்று (08) அவர் சிறைச்சாலை விசேட மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், தேசிய கண் மருத்துவமனையின் நிபுணர் ஒருவரிடம் மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்திருந்தார்.
அதன்பேரிலேயே, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று காலை கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், விசேட மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.


