உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இலவசமாக முட்டைகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
98 பார்வைகள்

உலக முட்டை தினத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் நோக்கில், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 25 முட்டைகள் அடங்கிய பொதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் திருக்கோவில் அரச கால்நடை வைத்திய அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இவ்விசேட நிகழ்வு இன்று (09) காலை தம்பிலுவில் 01, கிழக்கு கிளீனிக் சென்டரில் நடைபெற்றது.

திருக்கோவில் அரச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் U. கதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, “சிறிய முட்டை பெரிய நன்மைகள் – ஆரோக்கியமான நாளைக்காக முட்டைகளை உட்கொள்வோம்!” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அன்றாட உணவில் முட்டைகளைச் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கக்கூடிய உயர்தரப் புரதச்சத்து மற்றும் ஏனைய போசாக்கு நன்மைகள் தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக, கருவின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுதல், கண் ஆரோக்கியத்தைப் பேணுதல், நோய் எதிர்ப்புச் சக்தியை ஆதிகரித்தல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணுதல் உள்ளிட்ட முட்டை உணவின் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா 25 முட்டைகள் அடங்கிய பொதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருக்கோவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்தின் வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், திருக்கோவில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தி, தாய்மார்களின் ஆரோக்கியத்தையும் எதிர்காலச் சந்ததியினரின் நலனையும் பாதுகாக்கும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

137 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

136 0 0