உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பதினாறு முன்னாள் அமைச்சர்கள் ஊழல் மோசடியில் சம்பந்தம்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
93 பார்வைகள்

ஒக்டோபர் 2024 மற்றும் ஒக்டோபர் 2026 ஆகிய காலப்பகுதியில் விசாரிக்கப்பட்ட இலஞ்ச, ஊழல் தொடர்பான வழக்குகளில், 16 முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்று பொதுப் பாதுகாப்புத் துறைக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தக் காலப்பகுதியில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கையாளப்பட்ட வழக்குகளில் மூன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், ஒரு முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களின் நான்கு மனைவிகள், ஏழு பிள்ளைகள் மற்றும் ஆறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.

ஊழல் என்பது முன்னாள் அரசியல் பதவியில் இருந்தவர்களுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கும் பரவியுள்ளது.

அரசியல்வாதிகளால் பணியமர்த்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் கூட இலஞ்சக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசு நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக தற்போதைய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே ஊழல் எதிர்ப்பு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்குக் காரணம்.

இலஞ்ச, ஊழல் விவகாரங்களைக் கையாள்வதில் நிறுவன ரீதியான சுதந்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த முன்னேற்றங்கள் வெளிப்படுத்துகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

137 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

136 0 0