உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் மதுபான சாலையை உடைத்துக் கொள்ளை !

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
62 பார்வைகள்

பொகவந்தலாவ கெம்பியன் நகரப் பகுதியில் இயங்கி வந்த மதுபான சாலை ஒன்றை இனம் தெரியாதவர்கள் உடைத்து அதிலிருந்து சில மதுபான போத்தல்களையும் பணத்தையும் களவாடிய சம்பவம் ஒன்று இன்று (08) இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தனர்.

நேற்று 7 ம் திகதி இரவு குறித்த பகுதிக்கு சென்று இனம் தெரியாத நபர் மதுபான சாலையின் முன்பக்க கதவினை உடைத்து உள் நுழைந்து அதில் உள்ள பணத்தையும் மற்றும் மதுபான சாலையில் இருந்த மதுபானம் அடைக்கப்பட்டிருந்த சில போத்தல்களையும் களவாடி சென்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ்சாரின் முதற் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் தடவியல் பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதை வேலை கைவிரல் அடையாள அதிகாரிகளும் சம்பவம் இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சந்தேக நபரை கைது செய்யும் நோக்கில் பொகவந்தலாவ பொலிஸார் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை மதுபான சாலையில் இருந்து ஒரு லட்சத்திற்கு அதிகமான பணம் களவாடப்பட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த மதுபானசாலையில் பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியையும் இனம் தெரியாத நபர் பணத்தை எடுத்து விட்டு குறித்த பெட்டியை வீதி ஓரமாக தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளதாக விசாரணையில் ஆரம்ப கட்டத்தில் இருந்து தெரியவந்துள்ளது என பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு 3 புதிய பாலங்களுக்கான வாய்ப்பு!

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் வகையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கும் உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுகீட்டில் மூன்று பாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மஸ்கெலியா பிரதேச…

53 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

65 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

41 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

49 0 0