உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

இலங்கை செய்திகள் 45 நிமிடங்கள் முன்
57 பார்வைகள்

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விதம் மற்றும் அவரது காவி உடை அகற்றப்பட்டமை என்பன பௌத்த சமூகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். காவி உடை என்பது நாட்டின் அடையாளம் என்பதால், அதற்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும்.

தற்போதைய அரசுக்கு வாக்களித்த பெரும்பான்மையான இடதுசாரி மற்றும் தேசியவாத சிங்கள பௌத்த மக்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளனர். அரசு பல்வேறு தரப்பினரைப் பயன்படுத்தி பௌத்த சமூகத்தின் உரிமைகள் மற்றும் நம்பிக்கைகள் மீது மறைமுகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

பௌத்த மதத்துக்குப் பாதிப்பு ஏற்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், மகா சங்கத்தினர் தங்களுக்குள்ள அரசியல் கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பௌத்த சமூகத்தைப் பாதுகாக்க ஒன்றுபட்டு அணிதிரள வேண்டும்.

மக்கள் நம்பிக்கைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மக்களின் கொந்தளிப்பை யாராலும் தடுக்க முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

55 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

46 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

45 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

52 0 0