உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கந்தப்பளை மாணிக்க விநாயகர் ஆலய மண்டபத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
39 பார்வைகள்

கந்தபளை மாணிக்க விநாயகர் ஆலய மண்டபத்தில் இன்று (07) பொதுமக்களின் நலன் கருதி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது.

நுவரெலியா பிரதேச சபை மற்றும் பிரஜாசக்தி தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியன இணைந்து இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தன.

இதற்காக மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர்கள் குழுவினர் கலந்துகொண்டு, நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கினர்.

பொதுமக்களின் சுகாதார நலனை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மருத்துவ முகாமில், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், இம்மருத்துவ முகாமில் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு, இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி. வடக்கில் போராட்டம்!

யாழ். மாவட்டத்தில் 04 புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வலி வடக்கு பிரதேச சபை எல்லைக்குள்ளும் ஒரு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய…

38 0 0
இலங்கை செய்திகள்

முல்லையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்! : உடனடித் தீர்வு தேவை என ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காட்டுயானைகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காட்டுயானைகளின் இத்தகைய…

64 0 0
இலங்கை செய்திகள்

தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்து செல்கிறது.

பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தோட்டங்களின் குத்தகையிலிருந்து தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் விடுவிக்கப்படாவிட்டால் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என முன்னாள் மத்திய மாகாண சபை…

65 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசாங்கத்தின் பௌத்த விரோத போக்கிற்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல் செய்யப்படும்.!

2,300 வருட கால ஹெல சாசன வரலாற்றில் மிகவும் இருண்ட நாளாக 2026 ஒக்டோபர் 06 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக தூய்மையான ஹெல உறுமய (பிவிதுரு ஹெல…

68 0 0