உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநுர அரசாங்கத்தின் பௌத்த விரோத போக்கிற்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல் செய்யப்படும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
66 பார்வைகள்

2,300 வருட கால ஹெல சாசன வரலாற்றில் மிகவும் இருண்ட நாளாக 2026 ஒக்டோபர் 06 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக தூய்மையான ஹெல உறுமய (பிவிதுரு ஹெல உறுமய) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

2026 ஒக்டோபர் 07 அன்று எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை வரலாற்றில் பிக்கு ஒருவரின் காவி உடை பலவந்தமாகக் களையப்பட்டு, அவர் சாதாரண நபர் போன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாளாக இந்நாள் மாறியுள்ளது. மத நடைமுறைகள் பற்றி அறியாத வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் கூட காவி உடைக்கு கை வைக்கத் துணியாத நிலையில், இந்த பழங்குடி மற்றும் மதச்சார்பற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனைச் செய்துள்ளது.

தற்காலிகமாக அதிகாரத்தைப் பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு, 2,300 வருட சாசன வரலாற்றை மாற்ற எந்த உரிமையும் இல்லை.

அரசாங்கம் வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் காவி உடையைக் களைய முனைந்தாலும், அவரது பிக்குத்துவத்தையும், மக்கள் மனதில் அவர் மீதான கௌரவத்தையும் பறிக்கத் தவறிவிட்டது.

நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்தபோது, கட்சி பேதமின்றி அனைத்து சட்டத்தரணிகளும், இளம் பிக்குகளும் அவரை வணங்கியமை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட தெளிவான செய்தியாகும்.

ஞானசார தேரரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தது சட்டவிரோதமானதும், சாசன விரோதமானதும் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானதும் ஆகும்.

சிறைச்சாலைத் துறையின் நிலையான உத்தரவு 550 இன் படி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய தண்டனை பெற்ற கைதிகள், சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படக் கூடாது என்றும், தண்டிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் அணிந்திருந்த உடைக்கு ஏற்ற சிவில் உடைகளை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்டனை பெற முன்னர் ஞானசார தேரர் அணிந்திருந்த உடை மஞ்சள் காவி உடையாகும்.

1894 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று வெளியிடப்பட்ட இலங்கை வரலாற்றின் முதலாவது சிறைச்சாலை விதிகள் மற்றும் சிறைச்சாலை நிலையான உத்தரவுகளின் 223ஆவது பிரிவிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளதுடன், 1947 ஆம் ஆண்டின் ‘அரசர் எதிர் ஸ்டீபன்’ வழக்குத் தீர்ப்பிலும் கைதிகளை சிறைச்சாலை சீருடையில் அழைத்து வருவது 223ஆவது பிரிவின் மீறலாகும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வினய பீடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பாராஜிகா’ என்ற நான்கு பாரிய தவறுகளில் எதனையும் ஞானசார தேரர் செய்யவில்லை. பௌத்த விதிகளின்படி, இந்த தவறுகளைச் செய்யாத ஒரு பிக்குவின் துறவறத்தை ரத்து செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை; அது அவர் சார்ந்த சங்க சபைக்கு மட்டுமே உள்ளது. எனவே, காவி உடையைக் களைந்தமையானது அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாத்துப் போஷிக்கும் ஏற்பாட்டை நேரடியாக மீறும் செயலாகும்.
இந்த சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்யவுள்ளோம்.

சிறைச்சாலை நிலையான உத்தரவுகளை மீறி ஞானசார தேரரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த தீர்மானத்தை இரத்து செய்யும் ரிட் (Writ) கட்டளையைப் பெறுவதற்கான முதலாவது வழக்கும், பாராஜிகா குற்றங்களைச் செய்யாத பிக்குகள் காவி உடையுடன் தண்டனையை அனுபவிப்பதற்கு சிறைச்சாலை உத்தரவுகள் தடையாக இருந்தால், அது அரசியலமைப்பின் 9 ஆம் பிரிவை மீறுவதால் அதனை இரத்து செய்வதற்கான கட்டளையைப் பெறுவதற்கான இரண்டாவது வழக்கும் தாக்கல் செய்யப்படும். இது தொடர்பாக ஞானசார தேரருடனும், கோட்டே சங்க சபையின் பதிவாளர் பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல தேரருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முல்லையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்! : உடனடித் தீர்வு தேவை என ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காட்டுயானைகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காட்டுயானைகளின் இத்தகைய…

57 0 0
இலங்கை செய்திகள்

தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்து செல்கிறது.

பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தோட்டங்களின் குத்தகையிலிருந்து தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் விடுவிக்கப்படாவிட்டால் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என முன்னாள் மத்திய மாகாண சபை…

61 0 0
இலங்கை செய்திகள்

கந்தப்பளை மாணிக்க விநாயகர் ஆலய மண்டபத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

கந்தபளை மாணிக்க விநாயகர் ஆலய மண்டபத்தில் இன்று (07) பொதுமக்களின் நலன் கருதி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது. நுவரெலியா பிரதேச சபை மற்றும்…

37 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் பாதுகாப்புக்கு உடன் உத்தரவாதம் அளியுங்கள் : சபையில் சாணக்கியன் வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்குச் சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து அரசு உடனடியாக விரைந்து செயற்பட வேண்டும்…

63 0 0