உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள்; மக்கள் அச்சத்தில்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
74 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்த மாத தொடக்கத்தில் ஒரே நாளில் நான்கு கடைகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து மன்னார் நகரின் பல முக்கிய கிராமங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக மூர் வீதி, உப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது வீடுகளில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, கோவில் உண்டியல்களிலும் பணம் திருடப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டப்பகலிலேயே சில திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் அசமந்தம் போக்குடன் செயல்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் செல்லும் போது, சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் உரிய ஆதாரங்களுடன் வருமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாளுடன் சென்று ஊரவர்களை மிரட்டும் இளைஞர்கள்; பொலிஸார் பாராமுகம்.!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிகோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வாளுடன் சென்று அந்த ஊரவர்களை மிரட்டுகின்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை…

46 0 0
இலங்கை செய்திகள்

உருத்திரபுரம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்.!

கடந்த முதலாம் திகதி உருத்திரபுரம் பகுதியில் சசிதரன் சமரழகி என்ற 17 வயதான யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். குறித்த யுவதி தன்னுடைய தற்கொலைக்கு காரணம்…

40 0 0
இலங்கை செய்திகள்

தொழிலாளர் தேசிய முன்னணியின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணிக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு.!

தொழிலாளர் தேசிய முன்னணியின் கௌரவ தலைவர் பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, தொழிலாளர் தேசிய முன்னணியின் இளைஞர் அணி, மற்றும் மகளிர் அணிக்கான நியமனங்கள் வழங்கி…

46 0 0
இலங்கை செய்திகள்

இன்று முதல் மூடப்படும் சங்குப்பிட்டி பாலம்.!

சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று புதன் கிழமை (07.10.2026) முதல் திங்கட்கிழமை 12.10.2026 வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில், இன்று காலை 9…

69 0 0