உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்று முதல் மூடப்படும் சங்குப்பிட்டி பாலம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
63 பார்வைகள்

சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று புதன் கிழமை (07.10.2026) முதல் திங்கட்கிழமை 12.10.2026 வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில், இன்று காலை 9 மணி வரை மாத்திரம் பேருந்து சேவைகள் வழமை போன்று பாலத்தின் ஊடாக இடம்பெறும்.

அதன் பின்னர் மாற்று வழித்தடத்தின் ஊடாக பேருந்து சேவைகள் தொடரும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சங்குப்பிட்டி பாலம் மூடப்படும் காலப்பகுதியில் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, பேருந்து சேவைகள் தடையின்றி இடம்பெறுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து பூநகரி நோக்கி வரும் பேருந்துகள், பூநகரியிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்தி, அதே வழித்தடத்தின் ஊடாக மீண்டும் பேருந்து சேவைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக பேருந்துகளின் பயணத் தூரம் சுமார் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவை வழங்குநர்கள் சேவை நோக்குடன் மாற்று வழித்தடத்தில் பேருந்து சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், அதிகரிக்கும் பயணத் தூரத்தை கருத்திற்கொண்டு, சிறிய அளவிலான பேருந்துக் கட்டண உயர்வு ஏற்படக்கூடும் எனவும், இதனை பயணிகள் கருத்திற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனவே, நாளை முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சங்குப்பிட்டி பாலத்தைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்று வழித்தடம் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், பேருந்து சேவைகள் சீராக இடம்பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ.விமலேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள்; மக்கள் அச்சத்தில்.!

மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்த மாத தொடக்கத்தில் ஒரே நாளில்…

68 0 0
இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் சர்வதேச தரநிலை தொடர்பாக கலந்துரையாடல்.!

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார…

73 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள்.!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 புதிய மதுபானசாலைகளை (பார்களை) ஆரம்பிப்பதற்கான அனுமதிப் பணம் உரிய பிரதேச செயலகங்களில் செலுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2024 ஆம்…

85 0 0
இலங்கை செய்திகள்

தண்டனைக் காலம் 3 ஆண்டுகளுக்கும் அதிகம் எனின் சிறை ஆடை கட்டாயம்.!

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப்…

75 0 0