உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் சர்வதேச தரநிலை தொடர்பாக கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
74 பார்வைகள்

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

2026 ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் செயல்திட்டத்தை அமைச்சு மற்றும் நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

நமது நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்தை உணர்ந்து, ஆபத்தைக் குறைப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது வேறு தரப்பினரின் அழுத்தங்களினால் அன்றி, நமது நிறுவன கட்டமைப்புக்கும் நாட்டுக்கும் தேவையானது என்பதற்காக செய்யப்பட வேண்டிய பணி என்று கருதப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்த மதிப்பீட்டுச் செயல்முறை தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை இலங்கை மத்திய வங்கியில் ஸ்தாபிக்கப்பபட்டுள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்வதுடன்,
தொழிநுட்ப இணக்கப்பாடு குறித்த பரிந்துரைகள் மற்றும் செயல்திறன் தொடர்பாக அதிகாரிகள் இங்கு ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டவைகள் தொடர்பான சட்டத்தைச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவருதல், கம்பனிச் சட்டம் மற்றும் அதன் செயற்பாடுகள், நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

மேற்படி பரிந்துரைகளைச் செயற்படுத்துவதில் ஏதேனும் குறைபாடுகளோ அல்லது தாமதங்களோ இருப்பின், அவற்றை திருத்தி, அரசாங்கமாகவும் நிறுவன கட்டமைப்பாகவும் எதிர்வரும் 03 வாரங்களுக்கு இச்செயல்பாட்டில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், நிறுவன அறிக்கைகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் உரிய குழுக்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி, தயார் நிலையுடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த மூன்றாவது மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு ஒரு நாடாக இன்றைய தினத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒரு பணி இது என்று மேலும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிர பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள்; மக்கள் அச்சத்தில்.!

மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்த மாத தொடக்கத்தில் ஒரே நாளில்…

68 0 0
இலங்கை செய்திகள்

இன்று முதல் மூடப்படும் சங்குப்பிட்டி பாலம்.!

சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று புதன் கிழமை (07.10.2026) முதல் திங்கட்கிழமை 12.10.2026 வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில், இன்று காலை 9…

63 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள்.!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 புதிய மதுபானசாலைகளை (பார்களை) ஆரம்பிப்பதற்கான அனுமதிப் பணம் உரிய பிரதேச செயலகங்களில் செலுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2024 ஆம்…

86 0 0
இலங்கை செய்திகள்

தண்டனைக் காலம் 3 ஆண்டுகளுக்கும் அதிகம் எனின் சிறை ஆடை கட்டாயம்.!

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, 3 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப்…

75 0 0