உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை எதிர்ப்போர் உயர் நீதிமன்றத்தை நாடலாம்.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
78 பார்வைகள்

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம். இதனை எதிர்ப்பவர்கள் உயர்நீதிமன்றத்தை நாடலாம். அதனையடுத்து நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கமைய அதனை நிறைவேற்ற முடியும்.” – என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
“பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக இரத்துச் செய்யப்படும். ஆனால் அரசொன்றுக்கு பயங்கரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. அதனை எவரும் எதிர்க்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.

எவ்வித சட்டமும் இன்றி நாட்டை நிர்வகிக்கலாம் என சிலர் நினைக்கலாம். எனினும் மற்றும் சிலர் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு இதனை விட கடுமையான சட்டங்கள் தேவை என்ற நிலைப்பாட்டிலிருக்கலாம்.

இவ்வாறான நிலைமைக்கு மத்தியிலேயே நாம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பித்திருக்கின்றோம். இதனை எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். அதனையத்து நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கமைய அதனை நிறைவேற்ற முடியும்.” – என்றார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

82 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0