உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபனை எவ்வாறு நினைவேந்த முடியும்?

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
34 பார்வைகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், திலீபனுக்கு எவ்வாறு நினைவேந்தல் அனுஷ்டிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின்போது, வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையிலேயே அவர் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவிடம் மேற்படி கேள்வியை எழுப்பினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டதில்லை. இனவாதத்தை முன்னிலைப்படுத்தாததுடன் தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளேன்.

வடக்கில் கடந்த மாதம் திலீபனுக்கு உருவச்சிலை வைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் பின்னர் ஆயுதப் போராளியாக அறிவிக்கப்பட்டு ‘ லெப்டினன்ட் கேணல்’ பதவிக்குத் தரமுயர்த்தப்பட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் நினைவேந்தல் அனுஷ்டிப்பதும், திலீபனுக்குச் சிலை வைத்துப் பின்னர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றமையும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.

நாட்டைப் பிளவுபடுத்தவோ அல்லது அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கவோ மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிலையில், ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளில் எவ்வாறு கலந்துகொண்டார்கள்.” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0