உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொருளாதார முகாமைத்துவத்தில் என்.பி.பி. அரசாங்கமும் படுதோல்வி.!

இலங்கை செய்திகள் 22 மணி நேரம் முன்
62 பார்வைகள்

தற்போதைய அரசு பலவீனமான மற்றும் தோல்வியடைந்த பொருளாதார முகாமைத்துவத்தையே முன்னெடுத்து வருகின்றது எனவும், இதன் காரணமாக நாட்டின் 22 இலட்சம் மக்களும் எதிர்காலத்தில் பாரதூரமான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நபர் ஒருவர் 30 நாட்கள் வாழ்வதற்கு 17 ஆயிரத்து 719 ரூபாய் போதுமானது எனக்கூறிக்கொண்டு, மத்திய வங்கியும் புள்ளிவிபரவியல் திணைக்களமும் வழங்கும் போலித் தரவுகளின் அடிப்படையில் அரசு செயற்படுகின்றது. உலக வங்கியின் கூற்றுப்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 724 ரூபாய் தேவைப்படுவதால் நாட்டின் வறுமை 65.4 சதவீதமாக உள்ளது.

முந்தைய அரசின் நவ-தாராளவாதக் கொள்கையையே தற்போதைய அரசும் தொடர்கின்றது. படுகுழிக்கு இழுத்துச் செல்வது போல் வரிகளை விதித்து சமூகத்தில் அவலத்தை ஏற்படுத்தியுள்ள அரசு, மூளைசாலிகள் வெளியேற்றப்படுவதையும் ஊக்குவித்து வருகின்றது.

தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த புதிய சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்குச் செல்ல அரசு தவறிவிட்டது. மேலும், முறையற்ற கடன் முகாமைத்துவக் கொள்கைகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு இழந்துள்ளதுடன், தேவையற்ற விதிமுறைகளால் நேரடி வெளிநாட்டு முதலீடுகளும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன.

அரசு வழங்கும் உதவிகள் பெரும் செல்வந்தர்களுக்கும் கறுப்புப்பட்டியலில் உள்ள முயற்சியாண்மைகளுக்கு கிடைக்கின்றனவே தவிர, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கு முறையாகக் கிடைப்பதில்லை.

ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட 2/3 சம்பளக் கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை.

37 வருட சேவையைப் பூர்த்தி செய்து ஓய்வுபெறும் நாடாளுமன்றப் படைக்கலச் சேவிதர் உபுல் சோமரத்னவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

83 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

69 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது அங்குள்ள சட்டக் குழுவினர்…

75 0 0