உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசாங்கத்தின் செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள் – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
62 பார்வைகள்

தேசிய சிறுபான்மை இனம் என்ற வகையில் மலையகத் தமிழர்களை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையகத் தமிழ் மக்களை தேசிய நீரோட்டத்தில் அரவணைத்துச் செல்ல மறுப்பதோடு மறைமுகமான ஓர் ஒடுக்குமுறை நிகழ்ச்சி நிரலையும் முன்னெடுக்கின்றது என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் திலகரது ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் அத்தகைய பாரபட்சங்கள் பின்வருமாறு பட்டியல் இடப்பட்டுள்ளது.

1.பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையை (Nevida) நீக்கம் செய்யும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்த அதே வேளை மலைகளைப் பாதுகாக்கப்போகிறோம் எனும் பெயரில் புதுவிதமான மலையக அதிகார சபையைக் கொண்டு வந்து புதிய கிராமங்கள் அமைவதை தடுக்கும் சூழ்ச்சியை அரசாங்கம் செய்கிறது.

  1. இளைஞர் சேவை மன்றங்கள் கிராம சேவகர் பிரிவுக்கு மட்டுப்படுத்தப்பட்டு மலையக பெருந்தோட்ட இளைஞர்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நீக்கியுள்ளது.
  2. இரவோடிரவாக நோர்வூட் பிரதேச செயலகத்தை சூறையாடி ஹட்டன் நகரில் அமைத்துக் கொண்டதுடன் இரத்தினபுரியில் (எலபாத்த) புதிய பிரதேச செயலக கடட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கின்ற போதும் நோர்வூட்டில் பிரதேச செயலகக் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை
  3. தோட்ட துரைமாரைக் கொண்டு தொழிலாளர்களை மிரட்டுதல்; குறிப்பாக தனி வீடு சார்ந்த விடயங்களில் இடம்பெறுகிறது. (சென்லேனார்ட்ஸ், நீலகாமம், லவர்ஸ்லீப் தோட்டங்கள் என இந்த அவலம் தொடர்கிறது)
  4. வீட்டுக் காணி உறுதி வழங்கலில் கடந்த ஆட்சியின்போது கருணாதிலக்க காணி அமைச்சராக இருந்த காலத்தில் நடைமுறைப்படுத்தாமல் இரண்டாண்டுகளாக வெயாம் 50 வீடுகளை மாத்திரமே அமைந்துள்ளது. டன் காணி அமைச்சர் லால்காந்த மலையக மக்களின் காணி விடயம் குறித்து எதுவும் பேசுவதில்லை. ராகலைக்கு வந்து சென்றவர் வழங்கிய தீர்வு ஏதுமில்லை.
  5. தோட்டத் தொழிலாளர்களுக்கு 400/- நாள் கூலி உயர்வை வழங்கி அதிக கிலோ கொழுந்து பறிக்க வேண்டிய நிபந்தனையை கம்பனிக்கு வழங்கி தொழிலாளர்களை சுரண்ட அரசாங்கம் துணை போகின்றது.
  6. டித்வா புயல் அனர்த்தத்துக்கு பிறகு மீட்பு, மீள் கட்டமைப்பு விடயங்களில் மலையகத்தை முற்றாகப் புறக்கணித்துள்ளமை.
  7. கொத்மலையில் மக்கள் வீடிழந்து வீதியில் நிற்கும்போது ‘கடதோர’ விகாரையை புனரமைக்க ஜனாதிபதி வந்து கல் நாட்டிச் சென்ற போதும் மலையக மக்களின் நிலைமையைக் கண்டு கொள்ளவில்லை.
  8. ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்கு 50 மில்லியன் ஒதுக்கியதாக 2026 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கி கைதட்டல் வாங்கிக் கொண்ட போதும் கண்டு கொள்ளாமல் விட்டு இப்போது நிதி மீளவும் திறைசேரிக்கு செல்லவுள்ளது.
  9. ஹட்டன் பிரகடனம் குறித்து அவர்களது தேர்தல் அறிக்கையிலும் மீள் வலியுறுத்திக் கூறிய போதும் அதனை நடைமுறைப்படுத்த எந்த அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை.

இது போல இன்னும் பல காரணங்களால் ஜனாதிபதி அநுரவின் தேசிய முன்னெடுப்புகளில் முற்போக்கு அம்சங்களை அவதானித்தபோதும், ஒடுக்கப்படும் தேசிய சிறுபான்மை இனம் என்ற வகையில் இவரை எதிர்த்தாக வேண்டும் எனும் நிலைப்பாட்டைத் தூண்டுவதாக உள்ளது எனவும் தெரிவித்து உள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு கோரிக்கை.!

மத்திய மாகாண கண்டி மாவட்டத்தில் உள்ள ஹோப் தோட்ட வைத்தியசாலை, JEDB – ஹேவாஹெட்டையில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…

46 0 0
இலங்கை செய்திகள்

கண்டாவளை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூன்றிற்கு நிதியுதவி!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் கருனைநாதன்  இளங்குமரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கண்டாவளை கோட்ட பாடசாலைகள் மூன்றிற்கு பதினைந்து இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா நிதியில்…

37 0 0
இலங்கை செய்திகள்

நாட்டில் போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது! : பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை!!

இலங்கையில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (06)…

73 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தில் கௌரவிப்பு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) இடம்பெற்றது. திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர்…

63 0 0