உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாட்டில் போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது! : பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை!!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
74 பார்வைகள்

இலங்கையில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (06) கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை என உறுதிப்படுத்தினார்.

நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட எரிபொருள் வரிசைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் பரவிய தேவையில்லாத அச்சமும், சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்திகளுமே பிரதான காரணமாகும் எனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது ஏனைய தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ள போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (Ceypetco) விநியோகம் சீராக இயங்கி வருவதாகக் கூறிய அவர், பொதுமக்கள் அருகிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், ஏனைய தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதற்கு எவ்வித சட்டப்பூர்வத் தடைகளும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை, இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது எனத் தெரிவித்த தலைவர், பெரும்பாலும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கும் எரிபொருள் விலையில் மாற்றங்கள் இன்றி நிலையாகப் பேணப்படவே அதிக வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோக அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அமைதியைப் பேணுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு கோரிக்கை.!

மத்திய மாகாண கண்டி மாவட்டத்தில் உள்ள ஹோப் தோட்ட வைத்தியசாலை, JEDB – ஹேவாஹெட்டையில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…

46 0 0
இலங்கை செய்திகள்

கண்டாவளை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூன்றிற்கு நிதியுதவி!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் கருனைநாதன்  இளங்குமரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கண்டாவளை கோட்ட பாடசாலைகள் மூன்றிற்கு பதினைந்து இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா நிதியில்…

38 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள் – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம்.!

தேசிய சிறுபான்மை இனம் என்ற வகையில் மலையகத் தமிழர்களை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையகத் தமிழ் மக்களை தேசிய நீரோட்டத்தில் அரவணைத்துச்…

63 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தில் கௌரவிப்பு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) இடம்பெற்றது. திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர்…

63 0 0