உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மத்திய மலைநாட்டில் கனமழை.!

இலங்கை செய்திகள் 45 நிமிடங்கள் முன்
61 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கனமழையுடனான காலநிலை நிலவுகிறது.

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டமும் காணப்படுகிறது.

பஸ்பாகே கோரலை பிரிவில் நாவலப்பிட்டி பகுதியில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பஸ்பாகே கோரலை பிரிவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாவலப்பிட்டி நகரில் உள்ள கம்பளை வீதி மற்றும் பொது பேருந்து நிலையத்தில் வெள்ள நீருடன் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பயணிகள், பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள், சாரதிகள் நடத்துனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா ஹட்டன் நகரில் இருவேறு பகுதியில் கழிவு நீர் மற்றும் மழை நீர் வடிந்து செல்ல முறையான வடிகால் அமைப்பு இல்லாத நிலையில் டண்பார் பகுதியில் உள்ள மழைநீர் கழிவு நீருடன் கலந்த வெள்ள நீர் பள்ளத்தாக்கு வழியாக பேருந்து நிலைய கால்வாய்கள் நிரம்பி வீதியில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் புகையிரத நிலைய நுழைவாயில் பகுதியில் இருந்து ஹட்டன் மல்லியப்பூ சந்திவரை செல்லும் பிரதான சாலையில் கழிவு நீர் கலந்த மழைநீர் பெருக்கெடுத்து கால்வாய் நிரம்பி வீதியில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது அதிக அளவில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நுவரெலியா – கண்டி, நுவரெலியா – ஹட்டன், ஹட்டன் – கொழுப்பு, ஹட்டன் – கண்டி, ஹட்டன் – கினிகத்தேன, ஹட்டன் – மஸ்கெலியா ஹட்டன் – நோட்டன், ஹட்டன் – டயகம, ஹட்டன் – பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வாகன சாரதிகளும் வாகனங்களை செலுத்தும் போது வாகனங்களில் உள்ள மின் குமிழ்களை மிளிரச் செய்து வாகனங்களை ஓட்டி செலுத்துமாறு ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. மவுசாக்கலை, காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டி நிலையில் உள்ளது. கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது என நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் கண்டி நுவரெலியா மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்/வட்டு இந்துக் கல்லூரியின் 132ஆவது அகவை நிறைவு நாளும் பரிசளிப்பு விழாவும்.!

யாழ்/வட்டு இந்துக் கல்லூரியின் 132ஆவது அகவை நிறைவு நாளும் பரிசளிப்பு விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியின் முத்து திருநந்த வெளி அரங்கில் சிறப்பாக…

52 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் சிக்கி உ**யிரிழந்த ஆசிரியர்.!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திமிலத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய கமலநாதன் மதிவதனன் என்ற ஆசிரியரே…

72 0 0
இலங்கை செய்திகள்

தென்மராட்சியில் சோகம்; கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மீசாலை – புத்தூர்…

74 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரிப்பு.!

பெருந்தோட்ட மக்களுக்கெதிரான அடாவடித்தனங்கள் இந்த அரசாங்கத்தில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலியா லவர்ஸ்லீப் தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,…

51 0 0