உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இராஜதந்திரப் புரிதல் இந்த அரசுக்கு இல்லை : மரிக்கார் எம்.பி. குற்றச்சாட்டு

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
88 பார்வைகள்

இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் குறித்துத் தற்போதைய அரசுக்கு எவ்வித இராஜதந்திரப் புரிதலும் இல்லை எனவும், சர்வதேசக் கடற்பரப்பில் எழுந்துள்ள நெருக்கடிகளை இராஜதந்திர முறையில் கையாள அரசு தவறிவிட்டது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதால் மக்கள் உணவருந்தவும், பிள்ளைகளுக்குக் கற்பிக்கவும், மருந்து வாங்கவும் முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலக வங்கி அறிக்கையின்படி நாட்டின் 65 சதவீதமான மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சுற்றியுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் அமெரிக்காவினால் தடைவிதிக்கப்பட்ட 21 ஈரானியக் கப்பல்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அரசும் பாதுகாப்பு அமைச்சரும் நாடாளுமன்றத்தில் எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்க அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தப்பட வேண்டும்.

சர்வதேசத்துடன் எவ்வாறு கையாள்வது என்பது அரசுக்குத் தெரியவில்லை. இதன் காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரிலும் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. தங்களால் முடியாவிட்டால் எதிர்க்கட்சியிடம் ஆலோசனைகளைக் கேட்கலாம்.

அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சரியானவை என்றும் மக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக நம்பினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்வர வேண்டும். அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியே அமோக வெற்றி பெறும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

69 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

56 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

73 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

67 0 0