தொழிலாளர் தேசிய முன்னணியின் தேசிய சங்கத்தின் இளைஞரணிச் செயலாளராக ராஜ் அசோக் நியமனம்
தொழிலாளர் தேசிய முன்னணியின் தேசிய சங்கத்தின் இளைஞரணி பிரதான பொதுச் செயலாளராக மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் ராஜ் அசோக் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை, கட்சியின் பொதுச் செயலாளர் திரு. நகுலேஸ்வரன் மற்றும் உயர்பீட உறுப்பினர்களிடமிருந்து ராஜ் அசோக் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இளைஞர்களின் உரிமைகள், நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் ராஜ் அசோக் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இப்புதிய பொறுப்பு, மலையக இளைஞர்களின் குரலை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும்.
புதிய பொறுப்பில் சிறப்பாக செயலாற்றி, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வாழ்த்துக்கள்