உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

போ**தைப்பொருட்களுடன் சிக்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
91 பார்வைகள்

கொக்கெய்ன் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் விசேட பிரிவில் கடமையாற்றி விலகிய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அநுராதபுரம் வலய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம், சாலியபுர – ஜெயந்தி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வலய குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலியபுர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 690 மில்லிகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும், 23 கிராம் 600 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் கொழும்பில் உள்ள விசேட பொலிஸ் பிரிவொன்றில் கடமையாற்றியதுடன், பின்னர் பணிக்குச் செல்லாமல் சேவையிலிருந்து விலகியுள்ளார்.

இவர் நீண்டகாலமாக அநுராதபுரத்தின் பல பகுதிகளுக்குப் போதைப்பொருட்களை விநியோகிக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு போதைப்பொருட்களை வழங்கிய பின்னணி வலயமைப்பைக் கண்டறியும் நோக்கில் அநுராதபுரம் வலய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

70 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

57 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

69 0 0