மத்திய மாகாணத்தின் தேசிய ஆக்கத்திறன் போட்டிகள் மாத்தளையில் இடம்பெற்றுள்ளன
இந்துக் கலாசார திணைக்களத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் அறநெறிப் பாடசாலைகளுக்கான ஆக்கத்திறன் போட்டி இந்த ஆண்டும் நடைபெற்று வருகிறது
அந்த வகையில் போட்டியின் மாகாண மட்டப் போட்டிகள் மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியில் நடைபெற்றது
இந்தப் போட்டியில் நோர்வூட் பிரதேச மட்டப் போட்டி மற்றும் நுவரெலியா மாவட்ட மட்டப் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்று மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகி ,
முதலாமிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு மத்திய மாகாணத்தையும் , நுவரெலியா மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலையாக நோர்வூட் பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் சென்ஜோன் டிலரி தோட்டத்தைச் சேர்ந்த தென்மதுரை மறுமலர்ச்சி மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
முதல் முதலாக நாடகத் துறையில் தேசிய மட்டத்துக்ககுத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாடசாலையின் அதிபர் நா.சத்தியமூர்த்தியின் வழிகாட்டலில் ஆசிரியர் ரா. லதுஷன் ( நாடக கலைஞர் ) அவர்களின் வழிகாட்டலில் தேசிய மட்டப் போட்டிக்குத் தயாராகி வருகின்றனர்.