உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் நாட்டின் தலைவர் பங்கேற்காமை குறித்து விமர்சனம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
120 பார்வைகள்

நாட்டின் தலைவர் சர்வதேச மாநாடுகளில், குறிப்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருவது நாட்டின் ராஜதந்திர நடவடிக்கைகளின் பலவீனத்தையே காட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், சர்வதேச ரீதியில் நாட்டின் விவகாரங்களைக் கையாள்வதற்கும், உலகத் தலைவர்களுடன் உறவுகளைப் பேணுவதற்கும் மக்கள் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுத்தனர். இருப்பினும், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாட வேண்டிய முக்கிய தருணத்தில், நாட்டின் தலைவர் அதில் பங்கேற்காமல் கம்பஹாவில் தனது கட்சியின் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரானியக் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான சம்பவம் போன்ற பல முக்கிய சர்வதேசப் பிரச்சினைகள் நிலவும் இக்காலகட்டத்தில், நாட்டின் தலைவர் சர்வதேச அரங்குக்குச் சென்று உரையாடுவது அவசியமானது என அவர் வலியுறுத்தினார்.

மேலும், மொழித் திறமை என்பது இங்கு ஒரு தடங்கலாக இருக்க முடியாது என்றும், அதற்காக அனுபவம் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு உயர்மட்ட மாநாட்டுக்கு, நாட்டின் ஜனாதிபதி செல்லாமல் வெளியுறவு அமைச்சரை மட்டும் அனுப்புவது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசின் ராஜதந்திர மற்றும் வெளியுறவு அமைச்சின் செயற்பாடுகள் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை இது தெளிவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

158 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

147 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

138 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

137 0 0