உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை.!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
64 பார்வைகள்

லவர்ஸ்லீப் தோட்டத்தில் தங்களுக்கென வழங்கப்பட்ட காணிப் பகுதியில் வீடு அமைப்பதற்கான இடத்தைப் பார்வையிடச் சென்ற தோட்டத்தில் வசிப்பவர்களுக்கும், தோட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் “கள்ளத்தோணி” எனக் குறிப்பிட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ என அழைப்பதற்கு எவருக்கும் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள்.

மன்னர் ஆட்சிக் காலங்களில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு இலங்கைக்கு வந்து குடியேறினார்களோ, அதேபோன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முறையாக அழைத்து வரப்பட்டு, இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களது உழைப்பை அர்ப்பணித்துள்ளனர்.

எனவே, இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், குறித்த பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்” என செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக, பீற்று தோட்ட முகாமையாளரை, செந்தில் தொண்டமான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0