உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு.!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
77 பார்வைகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) திங்கட்கிழமை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (03) சனிக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரரை, சிறைச்சாலை அதிகாரிகள் இன்றைய தினம் காலை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதவாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், ஞானசார தேரருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தண்டனையில் எஞ்சியுள்ள காலத்தைச் சிறையில் அனுபவிப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற பிடியாணைத் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள பிடியாணைத் தொடர்பில் அவரை வரும் நாளை புதன்கிழமை (07) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0