உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
64 பார்வைகள்

இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் சுபாஷ் சுப விக்ரம கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,
“துறவற வாழ்க்கை என்பது மிகவும் தியாகங்கள் நிறைந்த ஒன்றாகும். நீதிமன்றத்தால் ஒருவர் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்ட போதிலும், நாட்டின் ஜனாதிபதிக்கு அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது. எனவே, ஞானசார தேரருக்கு ஏதேனும் ஒரு வழியில் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்பை நாம் முழுமையாக மதிக்கின்றோம். இருப்பினும், இவர் செய்தது எவ்வித கொலையோ, கொள்ளையோ அல்லது அரச சொத்துக்களை சேதப்படுத்திய குற்றமோ அல்ல.

எனவே, இந்த விடயத்தை மானுடபிமானக் கண்ணோட்டத்துடன் பரிசீலித்து, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என ஜனாதிபதியை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.”

இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் சுபாஷ் சுப விக்ரம தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0